தமிழ்நாடு

நடிகர் சங்க கட்டடத்திற்கு ஜெயலலிதா பெயரா? - விஷால் பதில்

நடிகர் சங்க கட்டடத்திற்கு ஜெயலலிதா பெயரா? - விஷால் பதில்

rajakannan

புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் வைக்கப்படுமா என்று கேள்விக்கு நடிகர் விஷால் பதில் அளித்துள்ளார். 

ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் விஷால் மரியாதை செலுத்தினார். அவருடன் சில ஆதரவாளர்கள் உடன் வந்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “ஜெயலலிதா செய்த நல்ல விஷயங்கள் இன்னும் மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. அவருக்கான நினைவிடம் சிறப்பாக கட்டப்பட்டு, மக்கள் வந்து பார்த்துச் செல்ல வேண்டும். ஜெயலலிதாவின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. வாழும் போது எப்படி சிரித்துக் கொண்டிருந்தாரோ, அதேபோல், அவரது ஆத்மாவும் சாந்தி அடைய வேண்டும். நடிகர் சங்க கட்டட திறப்பு விழாவின் போது வருகிறேன் என எங்களிடம் கூறியிருந்தார். ஆனால், அவர் இல்லாதாது மிகவும் வருத்தமாக உள்ளது” என்று கூறினார்.

மேலும், செய்தியாளர்கள் எழுப்பிய சில கேள்விகளும் விஷால் அளித்த்தார்.

நடிகர் சங்க கட்டடத்திற்கு ஜெயலலிதா பெயர் வைக்கப்படுமா?

தன்னிப்பட்ட முறையில் என்னால் முடிவு எடுக்க முடியாது. எல்லோரும் கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுப்போம். ஜெயலலிதாவைப் போல், கருணாதியும் சினிமா துறையில் முக்கிய பங்கு வைத்துள்ளார்.  

ஜெயலலிதா இல்லாத இரண்டு வருட ஆட்சியைப் பற்றி?

ஜெயலலிதாவின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தங்களுக்கு இருக்கும் நற்பெயரை காப்பாற்றிக் கொள்ள தற்போதைய ஆட்சியாளர்கள் முடிந்தவரை முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ரஜினி, கமல், விஜய் அரசியல் வருகை குறித்து?

பொதுமக்களுக்கு புது முகங்கள் வருவது என்பது ஆரோக்யமான விஷயம்தான். மக்களுக்கு நல்லது செய்வதற்காகதான் வருகிறார்கள். நிச்சயம் செய்வார்கள் என்று நம்புகிறேன். 

வருகின்ற தேர்தல்களில் நீங்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

மக்களவைத் தேர்தல் நிச்சயம் வரும். ஆனால், 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் வருமா என்பது சந்தேகம்தான். தேர்தல் வரும் நேரத்தில் என்னுடைய நிலைப்பாட்டினை சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.