தமிழ்நாடு

மழை வேண்டி ‘எட்டணா’ பாடலைப் பாடிய நடிகர் வடிவேலு

மழை வேண்டி ‘எட்டணா’ பாடலைப் பாடிய நடிகர் வடிவேலு

webteam

தெய்வத்தை வணங்குங்கள் நல்ல மழை பெய்யும் என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கலியாந்தூர் அதிகமுடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.  திருப்புவனம் வேளார் தெருவில் இருந்து 5 புரவிகளை கிராமமக்கள் ஊர்வலமாக சுமந்து வந்து அய்யனார் கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். ஊரைக் காவல் காக்கும் அய்யனாருக்கு புரவி எடுப்பு திருவிழா நடத்தினால் மழை பெய்யும் என்பது பல ஆண்டுகால ஐதீகம். ஆகவே இவ்விழாவில் இசைக் கச்சேரியும் நடத்தப்பட்டது.  

இந்த இசைக் கச்சேரி விழாவில் நகைச்சுவை புயல் வடிவேலு கலந்து கொண்டார். வடிவேலுவின் மனைவிக்கு கலியாந்தூர் சொந்த ஊர் என்பதால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வள்ளி திருமணம் நாடகத்தை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசும் போது அய்யனாருக்கு அடிக்கடி திருவிழா நடத்தி மழையை வரவழைக்க வேண்டும், அதில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். கலியாந்தூர் சுற்றுவட்டார கிராமங்களின் மருமகன் நான் என்றார். 

அப்போது அவர் அங்கு நடைபெற்ற இசைக் கச்சேரியில் குத்தாட்டம் போட்டதை கிராமமக்கள் வெகுவாக ரசித்தனர். பின் கிராமமக்கள் வேண்டுகோளுக்கு ‘எட்டணா இருந்தா என் ஊரு என்பாட்டை கேட்கும்’ என்ற பாடலை பாடி அசத்தினார்.