தமிழ்நாடு

வட்டிக்கு வட்டி செலுத்துவதை எதிர்த்தே வழக்கு: விரைவில் நடிகர் சூர்யா மேல்முறையீடு

வட்டிக்கு வட்டி செலுத்துவதை எதிர்த்தே வழக்கு: விரைவில் நடிகர் சூர்யா மேல்முறையீடு

Sinekadhara

வருமான வரிக்கு வட்டி செலுத்துவதிலிருந்து விலக்குகோரிய மனு தள்ளுபடியானதை எதிர்த்து விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என சூர்யா தரப்பு தெரிவித்திருக்கிறது.

வருமான வரிக்கு வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு கேட்டு நடிகர் சூர்யா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது வரி மதிப்பீட்டு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தராததால் வட்டிவிலக்கு பெற உரிமையில்லை எனவும், எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. வருமான வரித்துறையின் வாதத்தை ஏற்று சூர்யா மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து, வருமான வரிக்கு வட்டி ஏற்கெனவே செலுத்திவிட்டோம் எனவும், வட்டிக்கு வட்டி செலுத்துவதை எதிர்த்தே வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீடு செய்யவுள்ளதாக சூர்யா தரப்பு விளக்கமளித்திருக்கிறது. இந்த வழக்கில் நாங்கள் வெற்றியடைந்தால் ₹56,00,000 எங்களுக்கு திரும்ப கிடைக்கும் என சூர்யா தரப்பு விளக்கம் தெரிவித்துள்ளது.