தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?

jagadeesh

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, ரஜினி நாளைக்கு ஆஜராவாரா என்பது இதுவரை தெரியவில்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ஆஜராக வேண்டுமென ஒருநபர் ஆணையத்தால் சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகினார். ரஜினிகாந்திடம் கேட்கப்பட கூடிய கேள்விகள் அடங்கிய சீலிடப்பட்ட கவரை ஆணையம் வழங்கி உள்ளதாக ரஜினியின் வழக்கறிஞர் இளம்பாரதி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளிக்காத நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஆணைய தரப்பில் இருந்து  ஜனவரி 19 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் 24-வது கட்ட விசாரணை ஒய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் இன்று துவங்கியுள்ளது. வரும் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விசாரணையில் 56 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இன்றைய அமர்வில் 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

நாளை நடிகர் ரஜினிகாந்த் ஆஜராக வேண்டுமென ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ள நிலையில் ரஜினிகாந்த் ஆஜராவாரா அல்லது வழக்கறிஞர் ஆஜராவாரா என்பது இதுவரை தெரியவில்லை.