தமிழ்நாடு

"திமுக பேரணியில் பங்கேற்ற 14,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" - காவல்துறை

"திமுக பேரணியில் பங்கேற்ற 14,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" - காவல்துறை

webteam

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக நடத்திய பேரணியில் பங்கேற்ற சுமார் 14 ஆயிரம் பேர் மீதான வழக்கில் சட்ட ரீதியான நடவடிக்கை தொடரும் என உயர்நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவுப்படி பேரணியின் வீடியோ பதிவுகளை காவல்துறையினர் தாக்கல் செய்தனர். தடையை மீறி நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற சுமார் 14 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திமுக பேரணி தொடர்பான இரண்டு வழக்குகளை முடித்து வைத்தனர்.