தமிழ்நாடு

திருவாலங்காடு முதல் திருநள்ளாறு வரை.. சிவாலயங்களில் விமர்சையாக நடைபெற்ற ஆருத்ரா தரிசனம்!

திருவாலங்காடு முதல் திருநள்ளாறு வரை.. சிவாலயங்களில் விமர்சையாக நடைபெற்ற ஆருத்ரா தரிசனம்!

webteam

தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவ ஆலையங்களில் ஆருத்ரா அபிஷேக நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றுள் சிலவற்றை பார்க்கலாம்..

திருவாலங்காடு:

திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு விடிய விடிய நடைபெற்ற ஆருத்ரா அபிஷேகம் பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

திருவள்ளூர்:

திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், சிவபெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், முதல் சபை என்பதால். ரத்தினசபை என்றழைக்கப்படுகிறது. அதிகாலை நடராஜ பெருமான் ஆலமர பிரகாரத்தை வலம் வந்து, கோபுர தரிசனத்திற்கு வந்த பின், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். இன்று காலை பழைனூரில் நடராஜர் திருவீதி உலா நடைபெற்றது. திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் கோவில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

திருவண்ணாமலை:

லகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று நடராஜருக்கு ஆருத்ரா திருவிழா நடைபெற்றது இதற்காக இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவரான அண்ணாமலையாருக்கும் உண்ணாமலை அம்மனுக்கும் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சேய்விக்கப்பட்டது கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளினார் அங்கு அவருக்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகள் சேவிக்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சை பெரிய கோவிலில் ஆருத்ரா தரிசன நிகழ்வு நடைபெற்றது. 4 ராஜ வீதிகளில் வீதியுலா வந்த நடராஜருக்கு முன்பு நெல்மணிகளை தூவி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

திருநள்ளாறு:

திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம். விழா முன்னிட்டு ஸ்ரீ நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆருத்ரா உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ நடராஜர் மற்றும் ஸ்ரீ சிவகாமி தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி முன்னிட்டு ஸ்ரீ நடராஜருக்கு கோ பூஜை விமரிசையாக நடைபெற்றது.

தொடர்ந்து ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேதராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மாயூரநாதர் கோயிலில் திருவாதிரை உற்சவம் பத்து நாட்கள் கொண்டாடப்பட்டது. சதய நட்சத்திரத்தில் தொடங்கிய விழா நிறைவு நாளாக திருவாதிரை திருநாளான இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.