ஆலம் பூச்சி இறால் pt desk
தமிழ்நாடு

வேதாரண்யம்: மீனவர்கள் வலையில் உயிருடன் சிக்கிய அரியவகை ஆலம் பூச்சி இறால்

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலையில் உயிருடன் ஆழ்கடலில் காணப்படும் அரிய வகையைச் சேர்ந்த இறால் கிடைத்துள்ளது

webteam

செய்தியாளர் - சி.பக்கிரிதாஸ்

----------

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் வரையிலான சீசன் காலங்களில் நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் குடும்பத்துடன் தங்கி மீன்பிடித்து வருவர். இதில் அதிகபட்சமாக நாள்தோறும் ஐந்து டன்களுக்கு மேல் மீன்கள் கிடைக்கும்.

boat

இந்நிலையில் தற்போது சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மீனவர்களின் வலையில் வாவல், காலா, ஐலா, சீலா, திருக்கை பன்னா, நீலக்கால் நண்டு, புள்ளி நண்டு மற்றும் பல வகையான இறால்கள் பிடிபட்டு வருகின்றன. இவற்றை வியாபாரிகள் ஏலம் எடுத்துச் செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று கடலுக்குச் சென்று விட்டு இன்று கரை திரும்பிய மீனவர் வலையில் அதிசய இறால் ஒன்று சிக்கியுள்ளது.

இந்த இறால் மீனவர்களால் ஆலம் பூச்சி இறால் என்று அழைக்கப்படுகிறது. ஆழ் கடலில் மட்டுமே குறைந்த அளவில் காணப்படும் இந்த அரிய வகை இறால், மற்ற இறால்களைப் போல சுருட்டிக்கொண்டு இல்லாமல் நீளமாகவும் உடலில் கருப்பு, மற்றும் மஞ்சள் வளையங்களோடும் காணப்படும். நண்டு கால்கள் போல இறாலின் தலையின் இரண்டு பகுதியிலும் காணப்படுகிறது.

ஆலம் பூச்சி இறால்

500 கிராம் எடையுள்ள ஆலம்பூச்சி இறாலை மீனவர்கள் உணவு பொருளாக பயன்படுத்துவதில்லை என தெரிவித்தனர்.