தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு!

webteam

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இன்று பதவியேற்றார். 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, மேகாலயா தலைமை நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அதை ஏற்காத அவர், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி எனப்படும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது.

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கிண்டி ராஜ்பவனில் நடந்த இதற்கான விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசானி, சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.