தமிழ்நாடு

ரயில்வே ஊழியரை அதிமுக எம்பி தாக்கியதாக புகார்

ரயில்வே ஊழியரை அதிமுக எம்பி தாக்கியதாக புகார்

webteam

நிலக்கோட்டை அருகே ரயில்வே கேட்டை திறக்க மறுத்ததால் ஊழியர் மீது அதிமுக எம்பி உதயகுமார் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில்கள் நிறுத்தம்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் சென்ற அதிமுக எம்பி உதயகுமார்,அழகம்பட்டி என்ற இடத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டு இருந்தது. அப்போது ரயில்வே கேட்டை திறக்க சொல்லியுள்ளார். ஆனால் கேட் கீப்பர் திறக்காததால் ஆத்திரமடைந்த அதிமுக எம்பி உதயகுமார் கேட் கீப்பர் மணிமாறனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையெடுத்து கேட் திறக்கப்பட்டு எம்பி உதயகுமார் சென்றுவிட்டார். 

இதனைதொடர்ந்து மணிமாறன் ரயில்வே ஊழியர்களை வரவழைத்து ரயில்வே கேட்டை மூடாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மதுரை இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற பயணிகள் ரயில் பாதியில் நின்றது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மணிமாறனிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது ரயில்கள் தாமதமாக சென்றன. அதிமுக எம்பி கேட் கீப்பர் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அதிமுக எம்பி உதயகுமார் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார் அதில் கேட் கீப்பர் செல்போன் பயன்படுத்திக்கொண்டு கேட்டை மூடியதாகவும் இப்படி அலட்சியமாக இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு தன்னை கேட் கீப்பர் மணிமாறன் தாக்கியதில் நெஞ்சில் காயம் ஏற்பட்டதாக கூறி அதிமுக எம்பி உதயகுமார் கேட் கீப்பர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.