தனுஷ்கோடி அருகே கடலில் மிதந்து வந்த 23 லட்சம் மதிப்பிலான 95 கிலோ கஞ்சா மூட்டைகளை மரைன் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கொடிமரம் பாடு என்ற இடத்தில் கடலில் மிதந்து வந்த 95 கிலோ எடை கொண்ட கஞ்சா மூட்டைகள் கரை ஒதுங்கி உள்ளதாக மரைன் போலீசாருக்கு அப்பகுதியில் உள்ள மீனவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற மரைன் போலீசார், கரை ஒதுங்கி கிடந்த 95 கிலோ கஞ்சா மூட்டைகளை கைப்பற்றி இந்த கஞ்சா மூட்டைகள் கடலில் எப்படி மிதந்து வந்தது, யாரேனும் கடத்தல்காரர்கள் கஞ்சா மூட்டையை போலீசாரை கண்டதும் தூக்கிப் போட்டுச் சென்றனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.23 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.