வனத்துறையினர் விசாரணை pt desk
தமிழ்நாடு

வேலூர்: யானை தந்தத்தை விற்க முயற்சி - பாஜக பிரமுகர் உட்பட 9 பேரிடம் வனத்துறையினர் விசாரணை

வேலூரில் யானை தந்தத்தை விற்க முயற்சி செய்ததாக பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் உட்பட ஒன்பது பேரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ச.குமரவேல்

வேலூர் அடுத்த அரியூர் பகுதியில் ஒரு கும்பல் சட்ட விரோதமாக யானையின் தந்தத்தை விற்க முயற்சி செய்வதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றத் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சம்பத் என்பவரின் வீட்டில் 4 துண்டுகளாக வெட்டப்பட்ட ஒரு யானை தந்தம், யானை பல் ஆகியவற்றை விற்பனை செய்யும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பது தெரியவந்து. இதையடுத்து வேலூர் மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் சரத்குமார், பிரபு, சம்பத் உட்பட ஐந்து பேர் மற்றும் இவர்களோடு தொடர்புடைய நான்கு பேர் என மொத்தம் ஒன்பது பேரை பிடித்து வேலூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இவர்களிடம் இருந்து நான்கு துண்டு யானை தந்தம் மற்றும் பல் ஆகிவற்றை பறிமுதல் செய்துள்ளனர். யானை தந்தம் கடத்தல் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.