டெல்லி சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைவர்கள் என 88 பேர் திருச்சியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 600க்கும் மேற்பட்டோரை தொடர்புகொள்ள முடியவில்லை என கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டிருந்தது.
இந்நிலையில் டெல்லி சென்று திரும்பிய 28 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் என 88 பேர் திருச்சி அரசு மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டிருப்பதாகவும், ஆய்வு முடிவுகள் வெளிவந்த பின்னரே கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த 88 பேர் தவிர மேலும் 8பேர் திருச்சி அரசு மருத்துவமனையிலுள்ள கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.