அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சட்டப் பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில7.5 சதவிகித உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்து வைக்கிறார்.
தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்து அறிய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.