குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டதால் காஞ்சிபுரத்தில் பல ஏரிகள் நிரம்பி வருகின்றன.
இதுகுறித்து பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி முத்தையா கூறும்போது, 42 ஏரிகள் குடிமராமத்து செய்யப்பட்டன, கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. பாலாற்றில் நீர் வந்த போது, தூர்வாரப்பட்ட கால்வாய்கள் மூலமே 36 ஏரிகள் நிரம்ப வழி செய்தோம். அடையாறு பகுதிகளில் பெய்த மழையால் 69 ஏரிகள் முழு கொள்ளளவையும், 136 ஏரிகள் 75 விழுக்காடும், 142 ஏரிகள் 50 விழுக்காடும் நிரம்பியுள்ளன என்று கூறினார்.