மனித கழிவை பட்டியலின மாணவரை கொண்டு சுத்தம் செய்ய வைத்த ஆசிரியைக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கலில் உள்ள அரசுப் பள்ளியில், கடந்த 2015 ஆம் ஆண்டு, பட்டியலின மாணவர் ஒருவரை, மற்றொரு மாணவரின் கழிவை சுத்தம் செய்ய வைத்ததாக ஆசிரியை விஜயலட்சுமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நாமக்கலில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை நிறைவடைந்த நிலையில், ஆசிரியை மீதான குற்றச்சாட்டு உறுதிச் செய்யப்பட்டதாக அறிவித்த நீதிபதி, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, ஆசிரியை விஜயலட்சுமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.