தமிழ்நாடு

உறவினரின் திருமணத்திற்கு அழைத்து செல்லாத கணவர்: சென்னையில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

உறவினரின் திருமணத்திற்கு அழைத்து செல்லாத கணவர்: சென்னையில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

Rasus

திருமணத்திற்கு அழைத்து செல்லாத விரக்தியில் 5 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு தாம்பரம் திருப்பூர் குமரன் தெருவில் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருபவர் நரேந்திரன்(38). இவர் மென்பொருள் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அனிதா(34). இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. பெற்றோர்கள் பார்த்து வைத்து நடைபெற்ற திருமணம்தான். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு என இருந்தாலும் அது பெரிய அளவில் சென்றதில்லை.

இந்நிலையில் நேற்றிரவு நரேந்திரன் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சி புறப்பட்டார். உடன் தனது குழந்தையையும் அழைத்து சென்றார். 5 மாத கர்ப்பிணியான மனைவி அனிதா தன்னையும் திருமணத்திற்கு அழைத்து செல்லுமாறு கணவனிடம் கூறியுள்ளார். அதற்கு கர்ப்பிணியாக இருப்பதை காரணம் காட்டி திருமணத்திற்கு அழைத்து செல்ல மறுத்திருக்கிறார் நரேந்திரன்.

இதனால் உச்சகட்ட விரக்தியடைந்த 5 மாத கர்ப்பிணி பெண் அனிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமண நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய கணவர் வீட்டில் மனைவி தூக்கில் தொங்கியவாறு இருந்தவரை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் நரேந்திரன். அங்கு அனிதா உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தாம்பரம் போலீசார் திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆகியுள்ளதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

தகவல்கள்: சாந்தகுமார், செய்தியாளர்.