தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்து பயணக் கட்டணம் 5 சதவீதம் குறைத்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
நான் ஏசி சீட்டர், நான் ஏசி ஸ்லீப்பர், ஏசி சீட்டர், ஏசி ஸ்லீப்பர், வால்வோ ஸ்லீப்பர், ஏசி சீட்டர் என 6 வகையாக கட்டணம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை- கோவை இடையே
குறைந்தபட்சம் 724 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 2 ஆயிரத்து 874 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போல், சென்னை- நெல்லை இடையே குறைந்தபட்ச = கட்டணம் ஆயிரத்து 959 ரூபாயும், அதிக பட்ச கட்ணம் 3 ஆயிரத்து 266 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை- மதுரை இடையே குறைந்தபட்சம் ஆயிரத்து 505 ரூபாயும், அதிகபட்சம் 2 ஆயிரத்து 508 ரூபாயும் பயணக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதோடு, முன்பதிவு செய்த பயணிகளுக்கு 5 சதவீத கட்டணத்தொகையை திரும்ப அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.