குற்றாலம் கோவிலுக்கு சொந்தமான கடை மற்றும் இடங்களில் 5 கோடியே 88 லட்சத்திற்கும் மேல் வாடகை பாக்கி. கடைகளை சீல்வைக்கச் சென்ற நிர்வாகத்தினரை வணிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றால நாதர் கோவிலுக்குச் சொந்தமான 180 வகையான கட்டிடம் மற்றும் காலிமனைகள் உள்ளது. இந்த நிலையில் இந்த கட்டடங்கள் மற்றும் காலிமனைகளில் கடந்த சில ஆண்டுகளாக வாடகை பாக்கி இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது 5 கோடியே 86 லட்சத்துக்கும் அதிகமான தொகை பாக்கியாக உள்ளது. இதில் அதிக பாக்கி உள்ள கடைகளை பூட்டி கைவசப்படுத்த கோவில் நிர்வாகம் முயன்றது. இதில், பேரூந்து நிறுத்தம் அருகே 3 கடைகளை பூட்டிய நிர்வாகம் அதற்கு சீல் வைத்தது.
அப்போது வந்த வணிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த நிகழ்வு நடப்பதாகவும் கொரோனாவால் ஏற்கெனவே பாதிப்படைந்துள்ளதாக கூறி அதனை தடுத்தனர். அதனால் 3 கடைகளுக்கு மட்டும் சீல் வைத்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.