தமிழ்நாடு

1 கிலோ சிக்கனுக்கு 4 முட்டைகள் இலவசம்.. விழிப்புணர்வு ஏற்படுத்தும் கறிக்கடைக்காரர்..!

1 கிலோ சிக்கனுக்கு 4 முட்டைகள் இலவசம்.. விழிப்புணர்வு ஏற்படுத்தும் கறிக்கடைக்காரர்..!

Rasus

மதுரையில் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் பாத்திரத்தில் இறைச்சி வாங்குவோருக்கு 4 முட்டைகளை இலவசமாக கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சிக்கன் கடை உரிமையாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சின்மயானந்தம் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் தனது கடைக்கு இறைச்சி வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு பாத்திரத்தில் மட்டுமே இறைச்சிகளை வழங்கி வருகிறார்.

பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து பாத்திரத்தைக் கொண்டு வந்து இறைச்சி வாங்கும் அனைவருக்கும் நான்கு முட்டைகளை இலவசமாக வழங்கி பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சின்மயானந்தத்தின் இந்த முயற்சி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. ஒரு கிலோ சிக்கனுக்கு 4 முட்டைகளை இலவசமாக வழங்குவதன் மூலம் தமக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு பாதி குறைந்தாலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்த முயற்சி தமக்கு மிகுந்த மன நிறைவை தருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் சின்மயானந்தம். வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.