தமிழ்நாடு

மதுராந்தகம் ஏரியில் இருந்து 30,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றம் - வெள்ள அபாய எச்சரிக்கை

மதுராந்தகம் ஏரியில் இருந்து 30,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றம் - வெள்ள அபாய எச்சரிக்கை

Veeramani

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியில் இருந்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறுவதால் 21 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மதுராந்தகம் ஏரிக்கு நீர் வரத்து உயர்ந்து வருவதால் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கிளியாற்றங்கரையோரம் உள்ள கத்திரிசேரி, முன்னூத்தி குப்பம், ஒழுகைமங்கலம், இருசம நல்லூர், சகாய நகர் வளர்பிறை உள்ளிட்ட 21 கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்டம் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 80 பேர் அரசு அமைத்துள்ள இரு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் ஏரிக்கு நீர் வரத்து மற்றும் வெளியேற்றத்தை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.