தமிழ்நாடு

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறை

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறை

Rasus

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவர் கடந்த 1998-ஆம் ஆண்டு தமிழக-கர்நாடகா மாநில எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் மொத்தம் 108 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுளள்து. அத்துடன் 10,000 அவருக்கு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமைச்சராக இருப்பவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், பாலகிருஷ்ணா ரெட்டியின் அமைச்சர் பதவி பறிபோவதோடு உடனடியாக அவர் எம்எல்ஏ என்ற அந்தஸ்தையும் இழப்பார்.