தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையில் மூவர் குழு ஆய்வு

ஸ்டெர்லைட் ஆலையில் மூவர் குழு ஆய்வு

webteam

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான மூன்று நபர் குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. விசாரணை அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் குழு அமைத்து ஆலையில் ஆய்வு நடத்த பசுமைத் தீர்ப்பாயம் உத்தர விட்டது. தருண் அகர்வாலா, சதீஷ் சி.கர்கோட்டி, வரலட்சுமி ஆகியோர் கொண்ட குழு நேற்று ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட் டப்படும் இடத்தில் ஆய்வு நடத்தினர். இரண்டாவது நாளான இன்று ஸ்டெர்லைட் ஆலையில் அவர்கள் ஆய்வு நடத்தினர். 

சுமார் இரண்டு மணி நேர ஆய்வுக்குப் பிறகு அவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற குமரெட்டியாபுரம் கிராமத்தில் அவர்கள் ஆய்வு நடத்தினர். அப்போது கிராம மக்கள் அவர்களிடம் மனு அளித்தனர். ஆலையால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்தனர். ஆலையின் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டதாக எழுந்த புகார் குறித்து மூவர் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.