தமிழ்நாடு

பழனி பஞ்சாமிர்த கடை உரிமையாளர்களிடம் ரூ.2 கோடி, 56 கிலோ தங்கம் பறிமுதல்

பழனி பஞ்சாமிர்த கடை உரிமையாளர்களிடம் ரூ.2 கோடி, 56 கிலோ தங்கம் பறிமுதல்

webteam

பழனி பஞ்சாமிர்தம் கடை உரிமையாளர்களிடம் நடத்திய சோதனையில் 56 கிலோ தங்கம், 2 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சித்தனாதன், கந்தவிலாஸ் விபூதி, பஞ்சாமிர்தம் நிறுவனங்கள் வரிஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கடந்த 29ஆம் தேதி முதல் வரிமான வரித்துறையினர் கடை உரிமையாளர்களின் வீடுகள், குடோன்கள், அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். 5 நாட்களாக சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சோதனையின் முடிவில் கணக்கில் வராத 56 கிலோ தங்கம், 2 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக, 90 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.