தமிழ்நாடு

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - காலை 10.30 மணிக்கு தீர்ப்பு !

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - காலை 10.30 மணிக்கு தீர்ப்பு !

rajakannan

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது. 

இதையடுத்து வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து வந்தார். விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணியளவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறுபட்ட தீர்ப்பின் விவரம்:-

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை கடந்த ஜூன் 14ம் தேதி அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு வழங்கியது. 

முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி இந்திரா பானர்ஜி,

  • தமிழக சபாநாயகர் உத்தரவை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தக் கூடாது.
  • உரிய காரணங்களோடு சபாநாயகர் முடிவை எடுத்துள்ளதால் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும்.

நீதிபதி சுந்தர் அளித்த தீர்ப்பில், 

  • சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது.
  • சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருந்தாலும் தகுதிநீக்கம் செய்த முடிவு சரியல்ல.
  • சட்டப்பேரவை சபாநாயகர் எடுக்கும் முடிவு, வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்திருக்கிறாரா என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்.
  • ஆளுநரிடம் முதலமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஜக்கையன் எம்எல்ஏதான் முதலில் கடிதம் அளித்தார், ஆனால் அவரை தகுதிநீக்கம் செய்யாதது முரண்பாடாக உள்ளது.