நீலகிரி மாவட்டம் கூடலூரை ஒட்டிய கேரள பகுதியில் 14 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று பிடிபட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை ஒட்டியுள்ளது கேரளா மாநிலம், வழிக்கடவு பகுதி. இங்கு அரியவகை ராஜநாகம் ஒன்று வழிமாறி ஊருக்குள் புகுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் பாம்பு பிடிக்கும் நபரான முஜீப் என்பவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த முஜீப், சுமார் 14 அடி நீளம் கொண்ட அந்தப் பாம்பை லாவகமாக பிடித்தார்.
இதையடுத்து இந்தப் பாம்பு தமிழக - கேரள எல்லையிலுள்ள கீழ்நாடுகாணி வனத்தை ஒட்டிய பகுதியில் பத்திரமாக விடப்பட்டது. ராஜநாகம் விடுவிக்கப்பட்ட கீழ்நாடுகாணி வனப்பகுதி ராஜநாகம் வாழ ஏற்ற பகுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.