தமிழ்நாடு

உயர் கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண் மட்டும் போதும்: தமிழக அரசு

உயர் கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண் மட்டும் போதும்: தமிழக அரசு

webteam

உயர் கல்விக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தற்போது உள்ள கல்வித்திட்டத்தின் படி 10,11, 12ஆம் வகுப்பு என முன்று முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனால் மாணவர்கள் கடினமாக தேர்வுகளை எதிர்கொள்கின்றனர். இதனால் 11 ஆம் வகுப்பு கடினமாக இருபதாகவும் அதனை உயர்கல்விக்கு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, வரும் கல்வியாண்டு முதல் 11, 12 ஆம் வகுப்புக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கிடையாது. 600 மதிப்பெண்கள் வீதம் தனித்தனியாக வழங்கப்படும். பிளஸ் 1-க்கு பொதுதேர்வு நடத்தப்படும். ஆனால் அந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்விக்கு செல்லலாம். 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மன அழுத்தம் இருப்பதாக கூறுவதை அடுத்து 12 ஆம் வகுப்பு மதிப்பெண் 600 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது’ என்றார்.