Fisherman pt desk
தமிழ்நாடு

இலங்கை கடற்படை கைது செய்த 12 தமிழக மீனவர்கள் விடுதலை - ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுதலை செய்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

webteam

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 13 ஆம் தேதி 12 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து 12 மீனவர்களின் மீதான வழக்கு இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

Fisherman

அப்போது நீதிமன்றத்தில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில், மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் தீர்ப்பளித்தார். இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட 12 மீனவர்களும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மீனவர்கள் பயன்படுத்திய மீன்பிடி விசைப்படகுக்கான வழக்கு வரும் பிப்.11 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.