தமிழ்நாடு

சென்னையில் இன்று அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்

சென்னையில் இன்று அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்

webteam

சென்னை உள்பட 10 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறும்போது, ‘’அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால், அது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, இன்று புயலாக மாறும். அதனால் அடுத்த 3 நாட்களுக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். இந்த புயல் நகர்ந்து குஜராத் நோக்கி செல்கிறது. இந்த புயலினால் கடலில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும், நாளையும் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, கரூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்’’ என்றார்.