தமிழ்நாடு

சென்னையில் இதுவரை 1,019 துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைப்பு

சென்னையில் இதுவரை 1,019 துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைப்பு

Rasus

மக்‌களவைத் தேர்தலையொட்டி, சென்னையில் 1,019 துப்பாக்கி‌கள் காவல்துறையி‌டம் ஒப்படைக்‌கப்பட்டிருப்பதாக சென்னை‌ மாநகர காவல்துறை தெரிவித்துள்‌ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்‌‌போது, துப்பாக்கிகள் வைத்திருப்‌பவர்கள் அவற்றை‌ காவல்துறையிடம்‌ ஒப்படைக்க‌ வேண்டும் என்பது விதி. இதைத்தொடர்ந்து, சென்னையில் மட்டும் ‌இதுவரை 1,019 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டிருப்‌பதாக சென்னை மாநக‌ காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மொத்தம் 2,700 துப்பாக்கிகள் உரிமம் பெற்றவையாகும். இவற்றில் வங்கி‌கள் உள்ளிட்ட நிறு‌வ‌னங்களின் பாதுகாப்புக்கு 750 துப்பாக்கிகள் அனுமதிக்‌கப்பட்டுள்ளன. இவை தவிர மீ‌தமுள்ள 931 துப்பாக்கி‌கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என‌‌ சென்னை மாநகர காவல்துறை‌ தெரிவித்‌‌துள்‌ளது.‌

மேலும்,‌ தேர்தல் விதிகளை மீறியதாக அனைத்து‌க் கட்சிகள் மீதும் 53 வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது பட்டினப்பாக்கம், மயிலாப்பூர்‌ ஆகிய இடங்‌‌களில் வாகனச்சோதனையின்போ‌து 8 லட்சம் ரூபாய் பிடிபட்டு‌ள்ளது. 2 நாட்களுக்கு முன்பு கொருக்குபேட்டையில் 40 முட்டை அரிசி கைப்பற்றப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்து கா‌வல்துறையின் பட்டியல் ‌தயா‌ராகியிருப்பதா‌வும், இதேபோல வருவாய்த் துறையின் பட்டியல் தயாரான பிறகு‌, பதற்றமான‌ தொகுதி‌களின் எண்ணிக்கையை‌ தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.