தமிழ்நாடு

#WelcomeStalin vs #GoBackStalin : தெறிக்கும் ட்விட்டர் யுத்தம்

#WelcomeStalin vs #GoBackStalin : தெறிக்கும் ட்விட்டர் யுத்தம்

webteam

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்து வரும் நேரத்தில், #WelcomeStalin vs #GoBackStalin  என்ற ஹேஷ் டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளன. 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம், சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகத்திற்கு வந்தார். அப்போது திமுக உள்ளிட்ட கட்சியினர் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டியும், #GoBackModi என்ற வாசகத்தை எழுதிக் காட்டியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவங்களின் உச்சமாக திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் அவரது தொகுதியான சைதாப்பேட்டையில், #GoBackModi என்ற வாசகம் எழுதப்பட்ட பிரம்மாண்ட கறுப்பு பலூனை பறக்கவிட்டார்.

அன்றைய தினம் #GoBackModi என்பது சென்னை, இந்திய அளவில் ட்ரெண்டாகியது. ஒருகட்டத்தில் அது உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது. இதுமட்டுமின்றி சமீபத்தில் சென்னை அருகே நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தார். அப்போது #GoBackAmitsha என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. அது இந்திய அளவிலும் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம்பிடித்தது. இந்நிலையில் தான் மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்து வருவதை எதிர்த்து ட்விட்டரில், பாஜக ஆதரவாளர்கள் #GoBackStalin என்ற ஹேஷ்டேக்கை பரப்பி வந்தனர். அதுவும் சென்னை அளவிலான ட்ரெண்டிங் லிஸ்ட்டில் இடம்பிடித்தது. அதற்குள் திமுக ஆதரவாளர்கள் #WelcomeStalin என்ற ஹேஷ்டேக்கை பரப்ப ஆரம்பித்தனர்.

இருதரப்பிற்கு ட்விட்டர் மோதல் வெடித்தது. இருவரும் தங்கள் தரப்பிலிருந்து எதிர்ப்புகளையும், ஆதரவுகளை தெரிவித்து ட்விட்டர்களை போடத்தொடங்கினர். ஒரு கட்டத்தில் #GoBackStalin என்பதை #WelcomeStalin என்பது முந்தியது. இதனால் திமுக ஆதரவாளர்கள், பாஜக ஆதரவாளர்கள் தோற்றுவிட்டதாக ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர். தற்போது #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் லிஸ்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.