தமிழ்நாடு

“சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிர்கொள்ள தயார்” - சென்னை ஆணையர்

“சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிர்கொள்ள தயார்” - சென்னை ஆணையர்

webteam

வாக்கு எண்ணிக்கையின்போது சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. சென்னையில் நாளை 3 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், வடசென்‌னை மக்களவைத் தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கும் ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.‌ அதைத் தொடர்ந்து அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை மற்றும் ‌சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள காவல்துறையினர் தயாராக இருப்பதாகவும் கூறினார். சென்னையில் 3 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் சுமார் 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.