என்.ஐ.டி திருச்சியில் நாளை (17ஆம் தேதி) தொடங்கி வரும் 20 ஆம் தேதி வரை 'பிரக்யான்' என்ற சர்வதேச தொழில் நுட்ப - மேலாண்மை விழா நடைறுகிறது.
தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களது கண்டுபிடிப்புகளுக்கு இடையிலான போட்டிகள் நேரடியாகவும், இணைய வழியாகவும் நடத்தப்பட்டு 'பிரக்யான்' விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. என்.ஐ.டி மாணவர்கள் ஒவ்வொறு ஆண்டும் 'பிரக்யான்' விழாவினை நடத்தி வருகிறார்கள். நாளை தொடங்கப்படவுள்ள இவ்விழாவில் அறிவூட்டும் சொற்பொழிவுகள், வியக்கவைக்கும் தகவல்களுடன் கேளிக்கை நிகழ்ச்சிகள், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இலக்கியம் சார்ந்த குழு விவாதங்கள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளது.
சிறந்த கல்வி பாடத்திட்டத்தையும், கல்விச் சூழலையும் வடிவமைப்பதற்கான முயற்சியாக 'பிரக்யான்' விழாவினை என்.ஐ.டி மாணவர்கள் முன்னெடுத்துள்ளதாக திருச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் ஜி.அகிலா தெரிவித்தார்.