கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அடுத்த சில நாட்களில் துபாயில் ஆரம்பமாக உள்ளது நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடர்.
பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள இந்த தொடரில் காலியான மைதானங்களால் இளம் வீரர்கள் பதட்டமின்றி ஆடுவார்கள் எனவும், அதே நேரத்தில் அது சீனியர் வீரர்களுக்கு சவாலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் சைமன் கேட்டிச்.
‘ரசிகர்களின் வருகையின்றி ஐ.பி.எல் தொடர் நடக்க உள்ள காரணத்தால் சில இளம் மற்றும் புதுமுக வீரர்களுக்கு இந்த முறை பதட்டமின்றி விளையாடுவார்கள் என நம்புகிறேன். அதே நேரத்தில் அதுவே சீனியர் வீரர்களுக்கு சவாலாகவும் இருக்கலாம்.
மைதானத்தில் ரசிகர்களின் கர ஒலி மற்றும் அவர்கள் கொடுக்கின்ற ஊக்கத்தை சீனியர் வீரர்கள் மிஸ் செய்வதே அதற்கு காரணம்’ என ஆர்.சி.பி அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள வீடியோ பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விராத் கோலி மாதிரியான வீரர்களுக்கு இந்த தொடர் கொஞ்சம் சவாலாகவே இருக்கும். இருப்பினும் சுய கட்டுப்பாடு உள்ள வீரர்கள் அந்த சவாலை வென்று காட்டுவார்கள்’ என அண்மையில் சொல்லியுருந்தார் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளரான பேடி அப்டன்.