விளையாட்டு

2020 டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தகுதி 

2020 டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தகுதி 

webteam

இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் கசகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளில் ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சார்பில் பஜ்ரங் புனியா பங்கேற்றார். இதன் காலிறுதியில் வடகொரியாவின் ஜாங் சனை 8-2 கணக்கில் பஜ்ரங் புனியா வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து அரையிறுதிப் போட்டிக்கு அவர்த் தகுதி பெற்றார். அத்துடன் 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் பஜ்ரங் புனியா தகுதிப் பெற்றுள்ளார். 

எனினும் பஜ்ரங் புனியா தனது அரையிறுதிப் போட்டியில் நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவால் 9-9 என்ற கணக்கிலிருந்தும் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் நாளை வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கவுள்ளார். ஏற்கெனவே பெண்கள் பிரிவில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெற்றுள்ளார். இவர் பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் தகுதி பெற்றுள்ளார். அத்துடன் வினேஷ் போகட் இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.