தோனியை விட தினேஷ் கார்த்திக்கே இயல்பான கீப்பர் எனக் கருதியதாக ஜிம்பாப்பே கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் டடெண்டா தைபு தெரிவித்துள்ளார்
ஜிம்பாப்பே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டடெண்டா தைபு யூடியூப் சேனல் ஒன்றில் கிரிக்கெட் உலகம் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தோனியின் கீப்பிங் முறை குறித்தும், பேட்டிங் முறை குறித்தும் கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அதில், நான் முதன் முதலாக தோனியைப் பார்த்தபோது தினேஷ் கார்த்திக்கே தோனியை விட இயல்பான கீப்பர் எனக் கருதினேன்.
பேட்டிங்கிலும் தினேஷ் கார்த்தில் மிகவும் இயல்பானாவர். சுண்டுவிரல் இணைந்திருப்பதை போல தோனி தன் கைகளை வைத்திருப்பதே இல்லை. அவர் அந்த முறையை பயன்படுத்தித்தான் கேட்சுகளை பிடிக்கிறார். இது ஒரு தனித்துவமான முறை. அதேபோல் தோனியின் பேட்டிங் முறையிலும் வித்தியாசத்தை கையாள்கிறார். அவரது பேட்டிங் செய்யும் போது கைகளும் கண்களும் இணைந்தே செயல்படுகின்றன. அதுமட்டுமின்றி அவருடைய பேட்டிங்கில் அவரின் மன இறுக்கமும் பிரதிபலிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், சச்சின், ராகுல் ட்ராவிட் போன்றவர்களின் ஆட்டங்களை பார்த்து நான் பலவற்றை கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.