விளையாட்டு

கோலிக்கு கவுரவம் ! லார்ட்ஸ் மைதானத்தில் மெழுகுச் சிலை

கோலிக்கு கவுரவம் ! லார்ட்ஸ் மைதானத்தில் மெழுகுச் சிலை

webteam

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 12 வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உலகக் போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது. இந்த போட்டியில், இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. முதல் நாளான இன்று நடக்கும் போட்டியில் இங்கிலாந்து- தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.

மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதை முன்னிட்டு, கிரிக்கெட் பிறப்பிடமான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் மெழுகுச்சிலை வைக்கப்படுள்ளது. உலகின் நம்பர்-1 வீரரான விராட் கோலியின் இன்று முதல் ஜூலை 15 வரை லார்ட்ஸ் மைதானத்தில் காட்சிக்காக வைக்கப்படும். 

கோலியுடன் சேர்த்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஆகியோரின் சிலையும் லார்ட்ஸ் மைதானத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.