விளையாட்டு

"ஆஹா இதுதான் கிரிக்கெட்டின் ஸ்பிரிட்" வைரலாகும் ’கோலி - ஜோ ரூட்’ புகைப்படம்!

"ஆஹா இதுதான் கிரிக்கெட்டின் ஸ்பிரிட்" வைரலாகும் ’கோலி - ஜோ ரூட்’ புகைப்படம்!

jagadeesh

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டார், அதனைக் கண்ட கோலி உடனடியாக அவருக்கு உதவி செய்தார். இந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி சதமடித்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவின் போது ஆட்டமிழக்காமல் அவர் 128 ரன்களை எடுத்துள்ளார்.

சென்னையின் லேசான குளிர் கலந்த வெயிலையே ஜோ ரூட்டால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றே தெரிகிறது. அஸ்வின் பந்துவீசியபோது ஸ்வீப் ஷாட் மூலம் சிக்ஸ் அடித்தார் ஜோ ரூட். ஆனால் அவருக்கு காலில் லேசான தசைப்பிடிப்பு ஏற்பட்டு மைதானத்தில் படுத்துவிட்டார். இதனை பார்த்த விராட் கோலி அவருக்கு லேசான முதலுதவி செய்தார். இப்போது அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டின் சிறந்த தருணம்" என பதிவிட்டுள்ளது.

இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் முன்பு தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஒருவருக்கு இதேபோன்ற உதவியை தோனி செய்தார். இதனையடுத்து கோலி மற்றும் தோனியின் புகைப்படத்தை சேர்த்து வைத்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

How it started How it's going#INDvENG #Dhoni #Virat #TeamIndia pic.twitter.com/6EhprtXP7r
— MS Dhoni Fans Official (@msdfansofficial) February 5, 2021