விளையாட்டு

50% ஆஃபரில் விராத் - அனுஷ்கா ஷாப்பிங்: ரசிகர்கள் சுவாரஸ்ய கமென்ட்

50% ஆஃபரில் விராத் - அனுஷ்கா ஷாப்பிங்: ரசிகர்கள் சுவாரஸ்ய கமென்ட்

webteam

தென்னாப்ரிக்க தலைநகர் கேப் டவுனில் விராத் கோலியும், அனுஷ்கா சர்மாவும் ஷாப்பிங் செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளதை அடுத்து ரசிகர்கள் சில சுவாரஸ்யமான கமென்ட்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்ரிக்காவுடன் டெஸ்ட், ஒரு நாள் உள்ளிட்ட போட்டித் தொடர்களில் விளையாட உள்ளதை அடுத்து, புதிதாக திருமணமான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அங்கு தேன் நிலவுக்கு சென்றுள்ளனர். விராத் - அனுஷ்கா ஜோடி அவ்வப்போது தென்னாப்ரிக்காவின் சுற்றுலாத்தளங்களில் புகைப்படம் எடுத்து தங்களுடைய ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். நேற்று விராத் கோலி கேப் டவுனில் உள்ள கடற்கரையில் தனது மனைவி அனுஷ்காவுடன் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், “கேப் டவுன் கடற்கரை அழகானது. அதை அனுஷ்காவுடன் ரசிக்கும்போது இன்னும் அழகாக தெரிகிறது” என்று கவிதை மழை பொழிந்திருந்தார்.

தற்போது கோலியும், அனுஷ்காவும் கேப் டவுன் நகரில் ஷாப்பிங் செய்வது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர்கள் ஷாப்பிங் செய்யும் கடையில் 50 சதவிகிதம் ஆஃபர் என்ற அறிவிப்பு உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பல்வேறு கமென்ட்களை பதிவு செய்து வருகின்றனர். அவற்றுள் சில சுவாரஸ்யமான கமென்ட்கள்...

“அனுஷ்கா: பேபி, ஷாப்பிங் போகலாமா?
விராத்: போகலாம். அதற்கு சரியான இடம் எனக்கு தெரியும்” என்பதாக ஒரு கமென்ட்.

“விராட் கோலியின் ஆண்டு வருமானம் 7.1 மில்லியன் டாலர். அனுஷ்காவின் ஆண்டு வருமானம் 3.8 மில்லியன் டாலர். இருந்தும் அவர்கள் 50% ஆஃபர் உள்ள இடத்திற்கே ஷாப்பிங் செல்கிறார்கள்” என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

“ஒரு பெண் எந்தப் பெயரில் இருந்தாலும் அவர் பெண்தான். 50% ஆஃபர் என்ற அறிவிப்பு எந்த பெண்ணாக இருந்தாலும், அது அனுஷ்காவாகவே இருந்தாலும் கவரவே செய்யும். ஒரு ஆண் வேறு பெயரில் இருந்தாலும், விராத் கோலி என்ற பெயரில் இருந்தாலும், அவர் ஷாப்பிங் பேக்’களை தூக்கியே ஆக வேண்டும். கணவர்களுக்கு விதிவிலக்கு இல்லை” என்று ஒருவர் கமென்ட் அடித்துள்ளார்.

“கணவர் விராத் கோலியாக இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு 50% ஆஃபர் என்பது ஈர்ப்பையே கொடுக்கும்” என்று ஒரு ரசிகை தெரிவித்துள்ளார்.

“எவ்வளவு வருமானம் வந்தாலும், இந்தியர்கள் தள்ளுபடி விலையிலே ஷாப்பிங் செய்ய விரும்புவர்” என்று ஒருவர் கூறியுள்ளார்.