விளையாட்டு

கானா வீரரை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்தார் விஜேந்தர் சிங்

கானா வீரரை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்தார் விஜேந்தர் சிங்

rajakannan

ஆசிய பசிஃபிக் குத்துச் சண்டை பட்டத்தை இந்திய வீரர் விஜேந்தர் சிங் தக்கவைத்துள்ளார்.

இந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் முன்னணி வீரராக திகழும் விஜேந்தர் சிங், டபிள்யூ.பி.ஓ. ஒரியன்டல்,  ஆசிய பசிபிக்  பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறார். தொடர்ந்து 9 வர்த்தக ரீதியான போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தார்.

இந்த நிலையில் விஜேந்தர்சிங் தனது 10-வது தொழில்முறை குத்துச்சண்டையில் கானாவின் எர்னெஸ்ட் அமுஜூவுடன் இன்று மோதினார். இந்தப் பந்தயம் ஜெய்ப்பூரில் நடந்தது. 34 வயதான எர்னெஸ்ட் அமுஜூ 25 போட்டிகளில் விளையாடி 23-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டவர். விஜேந்தர்சிங் தனது பட்டங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகக் களமிறங்கியும் இந்தப் போட்டியை காண இந்திய ரசிகர்கள் ஆர்வமுடன் வந்தனர்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் கானா வீரர் ஏர்னர்ஸ்டோ அமுஸூவை விஜேந்தர் சிங் தோற்கடித்தார். வர்த்தக ரீதியிலான குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து 10வது வெற்றியை அவர் பதிவு செய்தார். இதன் மூலம் தனது ஆசிய பசிஃபிக் குத்துச் சண்டை பட்டத்தை விஜேந்தர் சிங் தக்கவைத்தார்.