விளையாட்டு

உலக தடகள போட்டி இன்று தொடக்கம்: விடை பெறுகிறது ’வேகம்’

உலக தடகள போட்டி இன்று தொடக்கம்: விடை பெறுகிறது ’வேகம்’

webteam

உலக தடகள போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. இது 16வது உலக தடகள போட்டியாகும். இன்று முதல் 13 ம் தேதி வரை நடக்கிறது. 205 நாடுகள் பங்கேற்கும் இதில் 24 போட்டிகள் இடம் பெறுகின்றன.

இந்தப் போட்டியுடன் ’உலகின் வேகம்’ ஜமைக்காவின் உசேன் போல்ட் விடைபெறுகிறார். 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான உசேன் போல்ட், ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். உலக தடகளத்தில் 11 தங்கப் பதக்கங்களை அள்ளியிருக்கும் இவர், தோற்கடிக்கப்படாமல் விடைபெறுவேன் என்று கூறியிருப்பதால், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. அவர் களம் இறங்கும் 100 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச் சுற்று நாளை நடக்கிறது.

நீண்ட தூர ஓட்ட நாயகன் மோ ஃபராவும் இந்த போட்டியுடன் விடைபெறுகிறார். இந்தியா சார்பில் லட்சுமணன், ஆரோக்ய ராஜீவ் உள்ளிட்ட 24 வீரர்,வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.