கிராண்ட் மாஸ்டர் பிரக்னாநந்தா இறுதி சுற்றிலும் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித்தர வாழ்த்துவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஆன்லைன் செஸ் போட்டிகளை ஜூலை 22 முதல் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பாக விளையாடிய சென்னை சிறுவன் பிரக்னாநந்தா(15) வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இவர் சீனாவின் லியூயானை தோற்கடித்தார்.
20 வயதுக்கு உட்பட்டோருக்கான Pool 'A'பிரிவில் இந்தியாவின் பிரக்னாநந்தா, திவ்யா தேஷ்முக் ஆகியோர் 4 ட்ரா மற்றும் 2 வெற்றி என்ற கணக்கில் இந்தியாவை வெற்றி பெறச் செய்துள்ளனர். இந்நிலையில் இந்தியா ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் அரையிறுதியில் இந்தியா விளையாட உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் "சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ஆன்லைன் செஸ் போட்டியில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்னாநந்தா அவர்கள் இறுதி சுற்றிலும் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித்தர எனது அன்பார்ந்த நல்வாழ்த்துகள்" என முதல்வர் பழனிசாமி பதிவிட்டுள்ளார்.