விளையாட்டு

மாறுவேடமணிந்து துர்கா பூஜையில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர்

மாறுவேடமணிந்து துர்கா பூஜையில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர்

webteam

இந்திய கிரிக்கெட் அணி முன்னணி வீரர் ஒருவர் வட இந்தியாவில் நடக்கும் துர்கா பூஜைக்கு சிங் வேடம் போட்டு கலந்து கொண்டதாகக் கூறியுள்ளார்.

பொது வாழ்வில் பிரபலமாக இருக்கும் பலரால் மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து பண்டிகைகளில் பங்கேற்க முடியாது.பிரபலமான நபர் பொது இடத்தில் மக்களுடன் மக்களாக இருக்கிறார் எனத் தெரிந்தாலே மக்கள் கூட்டம் அங்கு அலைமோதும். காவல்துறையின் கெடுபிடி அதிகமாக இருக்கும். இதனாலே தங்களுக்கு பிடித்தமான பல விஷயங்களை அவர்கள் தியாகம் செய்ய நேரிடும். சரி, விஷயத்திற்கு வருவோம். இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக ‘தாதா’ என அழைக்கபடும் கங்குலி, தனக்கு மிகவும் விருப்பமான துர்கா பூஜையில் சிங் வேடம் போட்டுக் கொண்டு சென்று பங்கேற்றதாக தெரிவித்துள்ளார். 

கங்குலிக்கு துர்கா பூஜை பிடித்தமான விஷயம். அவர் இந்திய அணியில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அவரால் சாதாரணமாக வெளியில் சென்று மக்களுடன் மக்களாக கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாது. இதனையடுத்து அவரது மனைவி டோனா, ஒரு மேக்அப் ஆர்டிஸ்டை வரவழைத்து கங்குலிக்கு சிங் வேடமிட்டுள்ளார். பின்னர் தனது மகளுடன் கங்குலி துர்கா பூஜையில் பங்கேற்றுள்ளார். துர்கா பூஜைக்கு மகளுடன் காரில் சென்ற கங்குலியை அங்கு பணியில் இருந்த காவலர்கள் அடையாளம் கண்டு சிரித்துள்ளார்.

கங்குலி, 'A Century is Not Enough ' என்ற புத்தகத்தை எழுதி வருகிறார். இந்த புத்தகத்திற்கான முன்னோட்ட வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கங்குலி அதில் இதனை தெரிவித்துள்ளார்.