ரபேல் நடால் புதியதலைமுறை
டென்னிஸ்

‘காயங்களோடு வாழ்ந்தவன் கண்ணீரோடு விடைபெறுகிறான்’ - டென்னிஸில் இருந்து விடைபெற்ற ரபேல் நடால் Timeline

"நான் அடிக்கடி காயமடைபவன் இல்லை. காயத்துடனேயே வாழ்ந்து கொண்டிருப்பவன். என்னுடைய தினசரி வாழ்க்கை மோசமாகிக்கொண்டே இருக்கிறது" என்று அவர் குறிப்பிடும் போது, அவர் எவ்வளவு வலியுடன் இந்த சாதனைகளை செய்தார் என்பதை பலரும் உணர்ந்தனர்.

karthi Kg

ஒரு துறையில் உச்சம் தொடும் பிரபலங்களை இருவகையாகப் பிரிக்கலாம். சிலர் Naturally gifted ஆக இருப்பார்கள். சிலர் அதீத பயிற்சி மேற்கொண்டு அந்த துறையின் உச்சத்தை அடைந்து இருப்பார்கள்.

மைக்கேல் பெல்ப்ஸ், உசைன் போல்ட், பைல்ஸ், மைக் டைசன் என சிலர் இந்த naturally gifted வகைமைக்குக் கீழ் வருவார்கள். மைக்கேல் பெல்ப்ஸின் உயரம் 6'4", அவரின் arm span 6'7"; உசைன் போல்ட்டின் உயரம் 6'5". இவர்கள் சார்ந்த கோலோச்ச பயிற்சிகளைக் கடந்து இந்த Naturally gifted பெரிய அளவில் இவர்களுக்கு உதவியது.

இன்னும் சிலர் கடுமையாக பயிற்சி மேற்கொள்வார்கள். பயிற்சி மட்டுமே இவர்களின் உற்ற துணை. ஆனால், ரபேல் நடாலின் உடல் என்பது முழுக்க முழுக்க காயமும், காயம் சார்ந்த இடம் மட்டும்தான். அந்த உடலை வைத்துக்கொண்டுதான் 20 ஆண்டுகளாக தொழிற்முறை டென்னிஸில் சாதித்திருக்கிறார் அவர். 2003 விம்பிள்டனில் அறிமுகம் ஆன நடால், இதுவரை தவறவிட்டிருப்பது 17 கிராண்ட் ஸ்லாம்கள்; வென்றது 22 கிராண்ட்ஸ்லாம்கள்!

அப்படியும் மோசமான ஃபிட்னெஸ்ஸால் அவர் ஒன்றும் காயமடையவில்லை. Mueller–Weiss syndrome என்ற சிக்கல் அவருக்கு சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. கால் பாத எலும்பு உருக்குலைவு காரணமாக ஏற்படும் இந்த சிக்கல் தொடர்ந்து வலியை ஏற்படுத்தி வந்திருக்கிறது. 2021 ஆம் ஆண்டு வரை அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமல் இந்த வலியை சகித்துக்கொண்டே வந்தார்.

ஒவ்வொரு முறை வலி அதிகரிக்கும்போதும், ஊசி போன்ற சிகிச்சைகளால் அதைத் தணித்துக்கொண்டே தொடர்ந்து விளையாடினார். 2022 ஃபிரெஞ்சு ஓப்பனை வெல்லும் போது, அந்த வலியை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். "நான் அடிக்கடி காயமடைபவன் இல்லை. காயத்துடனேயே வாழ்ந்து கொண்டிருப்பவன். என்னுடைய தினசரி வாழ்க்கை மோசமாகிக்கொண்டே இருக்கிறது" என்று அவர் குறிப்பிடும் போது, அவர் எவ்வளவு வலியுடன் இந்த சாதனைகளை செய்தார் என்பதை பலரும் உணர்ந்தனர்.

அப்படிப்பட்ட ரபேல் நடால், டேவிஸ் கோப்பையின் காலிறுதிச் சுற்றில் ஏற்பட்ட தோல்வியுடன் டென்னிஸில் இருந்து நேற்று முழுவதுமாக விடைபெற்றார். தோல்வியிலே ஆரம்பித்து, தோல்வியிலே முடிந்த சாதனை நாயகன் ரபேல் நடாலின் சாதனை டைம்லைன் நாம் அறிய வேண்டியது அவசியம். அது, இங்கே:

ரபேல் நடாலின் வயது 38

22 கிராண்ட் ஸ்லாம் டைட்டில்

14 ஃப்ரெஞ்சு ஓப்பன் வெற்றி

92 சிங்கிள் டைட்டில்

2002 : 15 வயதில் கரியர் தொடக்கம்

15 வயதில் முதல் ATP போட்டியில் வெற்றி

2003 : 17 வயதில் விம்பில்டன் மூன்றாவது சுற்று

2004 : டேவிஸ் கொப்பை வெற்றி

நம்பர் 1 வீரரான ஃபெடரரை மியாமியில் வென்றார்.

2005 : ஃப்ரெஞ்சு ஓப்பனில் வெற்றி

2005, ஏப்ரலில் டாப் டென்னுக்குள் நுழைந்தார். மார்ச் 2023 வரை டாப் டென்னில் நீடித்தார்.

2006 : இரண்டாவது ஃபிரெஞ்சு ஓப்பன் வெற்றி

2007 : களி மண் தரையில் 81 போட்டிகள் தொடர்ச்சியாக வென்ற நடாலை வீழ்த்தினார் ஃபெடரர்

2008 : விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ஃபெடரரை வீழ்த்தினர் நடால்.

2010 : ஃப்ரெஞ்சு ஓப்பனில் மீண்டும் வெற்றி

ஆஸ்திரேலிய ஓப்பனில் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். ஃபிரெஞ்சு ஒப்பனில் ஐந்தாவது வெற்றி; விம்பிள்டன்னில் இரண்டாவது வெற்றி ; US ஓப்பனிலும் வெற்றி

2011 : ஃபிரெஞ்சு ஓப்பனில் ஆறாவது வெற்றி

இடது காலில் காயம். ஜோர்ன் போர்கின் சாதனையான ஆறுமுறை சாம்பியனை சமன் செய்தார் (ஃபிரெஞ்சு ஓப்பன்) . அந்த சீசனில் விளையாடிய 10 ஃபைனைலில் ஏழு தோல்வி

2012 : ஃபிரெஞ்சு ஓப்பனில் ஏழாவது வெற்றி

ஜோக்கோவிச்சை வென்று ஏழாவது முறையாக ஃப்ரெஞ்சு ஓப்பனை வென்றார். இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து விளையாடவில்லை.

2013 : மீண்டும் நம்பர் 1

இடது முழங்கால் காயம் காரணமாக ஏழு மாதங்கள் விளையாடவில்லை.

எட்டாவது ஃபிரெஞ்சு ஓப்பன் வெற்றி ; இரண்டாவது US ஓப்பன் வெற்றி

2014 : 14 கிராண்ட் ஸ்லாம் டைட்டில்..!

ஃபிரெஞ்சு ஓப்பனில் 9வது வெற்றி பதிவு செய்து பீட் சாம்ராஸின் 14 கிராண்ட் ஸ்லாம் டைட்டில்களை சமன் செய்தார். வலது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று மாதங்கள் விளையாடவில்லை. Appendicitis காரணமாக இரண்டு தொடர்களில் விளையாடவில்லை.

2015 : ஃப்ரெஞ்சு ஓப்பனில் முதல் தோல்வி

ப்ரெஞ்சு ஓப்பன் காலிறுதியில் ஜோக்கோவிச்சிடம் தோல்வியுற்று வெளியேரினார். எல்லா தொடர்களிலும் முதற்கட்ட போட்டிகளில் தோல்வி

2016 : இடது மணிக்கட்டில் காயம்

ஃப்ரெஞ்சு ஓப்பனில் மூன்றாவது சுற்று தொடங்கும் முன்னரே இடது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். அடுத்த சில மாதங்கள் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

2017 : மீண்டும் நம்பர் 1

ஸ்டேன் வாவ்ரிங்காவை வென்று ஃபிரெஞ்சு ஓப்பனில் 10வது கோப்பையை வென்றார். மூன்றாவது US ஓப்பன் வெற்றி. நான்காவது முறையாக நம்பர் 1 இடத்தை கைப்பற்றினார்.

ரபேல் நடால்

2018 : மீண்டும் காயம்

11வது முறையாக ஃபிரெஞ்சு ஓப்பனில் வெற்றி பெற்றார். ஆனால், முழங்கால், இடுப்பு பகுதிகளில் ஏற்பட்ட காயம் காரணமாக மற்ற தொடர்களில் பங்கேற்கவில்லை.

2019: 33 வயதில் மீண்டும் நம்பர் 1

12வது ஃபிரெஞ்சு ஓப்பன்.

4வது அமெரிக்க ஓப்பன்

முழங்கால், இடது கை காயத்தால் அவதி

2020 : 20வது கிராண்ட் ஸ்லாம்

2021 : இடது கால் வலி

ஃப்ரெஞ்சு அரையிறுதில் ஜோக்கோவிச்சிடம் தோல்வி. இடது பாதத்தில் நாள்பட்ட வலி காரணமாக பல போட்டிகளில் விளையாடவில்லை

2022 : 14வது ஃபிரென்சு ஓப்பன் வெற்றி

நரம்புகளில் வலியை மறைக்க ஊசி போட்டுக்கொண்டு விளையாடினார். கேஸ்பர் ரூடை வீழ்த்து ஃபிரெஞ்சு ஓப்பனில் வெற்றி. வயிற்று தசைப் பகுதிகளில் காயம்

2023 : இடுப்பு அறுவை சிகிச்சை. அதன்பிறகு,

2024 ல் ஓய்வு பெற்றார்.

டேவிஸ் கோப்பையில் விளையாடிய இறுதிப்போட்டியில் நெதர்லாண்டின் Botic van de Zandschulp விடம் 6-4, 6-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.