விளையாட்டு

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - தமிழ்நாடு பிரீமியர் லீக் ஒத்திவைப்பு 

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - தமிழ்நாடு பிரீமியர் லீக் ஒத்திவைப்பு 

EllusamyKarthik

இந்தியாவின் எதிர்கால கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காண அண்மைய காலமாக ஐ.பி.எல் மாதிரியான லீக் தொடர்கள் பெருமளவில் உதவி வருகின்றன. ஜடேஜா, பும்ரா, பாண்டியா மாதிரியான வீரர்கள் எல்லாம் ஐ.பி.எல் மூலமாக இந்திய கிரிக்கெட் அணிக்குள் எண்ட்ரி கொடுத்தவர்கள். அதே போலவே தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் பேட்டோடும், பாலோடும் அசாத்திய திறமையோடு மைதானத்தில் துள்ளித் திரியும் வீரர்களை அடையாளம் காண உதவுகிறது TNPL தொடர். 

கடந்த நான்கு சீசன்களில் நடராஜன், வருண் சக்கரவர்த்தி, சாய் கிஷோர் மாதிரியான வீரர்கள் TNPL தொடர் மூலமாக தங்களது திறனை வெளிக்காட்டி ஐ.பி.எல் மாதிரியான சர்வதேச தொடர்களுக்கு விளையாட தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான TNPL தொடர் ஜூன் மற்றும் ஜூலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் ஆகஸ்ட் துவங்கி செப்டம்பர் வரை நடத்தப்படும் என சொல்லப்பட்டது. 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் பரவலின் தீவிரம் குறையாத காரணத்தினால் TNPL தொடரை  திட்டமிட்டபடி நடத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த தொடரை நவம்பர் அல்லது அடுத்த ஆண்டு நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என தமிழ்நாடு நாடு கிரிக்கெட் கழகம் தெரிவித்துள்ளது. 

ஐ.பி.எல் மற்றும் ரஞ்சி கோப்பைக்கான தொடர் முடிந்த பிறகு TNPL தொடர் நடத்தப்படும் என உறுதியாக தெரிவித்துள்ளனர் தமிழ்நாடு கிரிக்கெட் கழக உறுப்பினர்கள்.