ஐபிஎல் 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த செவ்வாய்க்கிழமை துபாயில் நடந்தது. பல சாதனைகள் அரங்கேறிய அந்த அரங்கில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் செயல்பாடு எப்படி இருந்தது? தங்களுக்குத் தேவையான வீரர்களை அந்த அணி வாங்கியதா? அனைத்து இடங்களையும் சரியாக நிரப்பிவிட்டதா? இன்னும் என்னென்ன பிரச்சனைகள் அந்த அணிக்கு இருக்கின்றன? ஓர் அலசல்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை அவர்களுக்கு மிகமுக்கிய தேவையாக இருந்தது ஒரு லெக் ஸ்பின்னர். ரஷீத் கான் வெளியேறிய பிறகு அவர்கள் அந்த இடத்துக்கு சரியான ஆள் இல்லாமல் தடுமாறினார்கள். ஒவ்வொரு சீசனிலும் ரஷீத் ஏற்படுத்திய வெற்றிடம் வெளிப்படையாகவே தெரிந்தது. அதை அவர்கள் நிரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதோடு மிடில் ஆர்டரில் ஆடக்கூடிய ஒரு இந்திய வீரரும் அவர்களுக்கு அவசியமாக இருந்தது. ஏனெனில் அப்துல் சமாத் போன்ற ஒரு வீரரால் தொடர்ந்து சிறப்பான செயல்பாடுகளைக் கொடுக்க முடியவில்லை.
அவசியமான தேவைகளாக இவை இருந்தபோது, அந்த அணி இன்னும் 2 இடங்களை டார்கெட் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. முதலாவது கேப்டன் ஸ்லாட். எய்டன் மார்க்ரம் கேப்டனாக இருப்பதில் அந்த அணி நிர்வாகம் திருப்தியாக இல்லை என்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மயாங்க் அகர்வால் செயல்பாட்டிலும் அவர்கள் திரிப்தியாக இல்லாததால் ஒரு பெரிய வெளிநாட்டு ஓப்பனரையும் வாங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த 2024 ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வாங்கிய வீரர்கள்
1. டிராவிஸ் ஹெட் - 6.8 கோடி ரூபாய்
2. வனிந்து ஹசரங்கா - 1.5 கோடி ரூபாய்
3. பேட் கம்மின்ஸ் - 20.5 கோடி ரூபாய்
4. ஜெய்தேவ் உனத்கட் - 1.6 கோடி ரூபாய்
5. ஆகாஷ் சிங் - 20 லட்ச ரூபாய்
6. ஜதவேத் சுப்ரமணியம் - 20 லட்ச ரூபாய்
தங்கள் கேப்டனுக்கான தேடலில் 20.5 கோடி ரூபாய் கொடுத்து பேட் கம்மின்ஸை வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஐபிஎல் வீரர்கள் ஏல வரலாற்றில் 20 கோடி ரூபாய்க்கு மேல் போன முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் கம்மின்ஸ். எவ்வித யோசனையும் இல்லாமல் அவருக்காக கடும் போட்டி போட்டி கம்மின்ஸை வாங்கியது அந்த அணி. அதேபோல் ஒரு நட்சத்திர ஓப்பனரை தேடிய அவர்களுக்கு டிராவிஸ் ஹெட் 6.8 கோடி ரூபாய்க்
அதை விட மிகப் பெரிய வெற்றியெனில் இலங்கையின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்காவை அந்த அணி 1.5 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அவர் காயமடைந்து பிறகு அவ்வளவாக விளையாடாத காரணத்தாலா என்னவோ எந்த அணியும் அவருக்காகப் போட்டியிடவில்லை. மற்ற 9 அணிகளுமே ஆர்வம் காட்டாத நிலையில் ஹசரங்காவை அவரது அடிப்படை விலையான 1.5 கோடி ரூபாய்க்கே வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். வேகப்பந்துவீச்சுக்கு பேக் அப் ஆக உனத்கட்டையும், தமிழ்நாடு லெக் ஸ்பின்னர் ஜதவேதையும் வாங்கியிருப்பது நல்ல முடிவுகள்.
வாங்கியவை அனைத்தும் நல்ல தேர்வுகள் என்றாலும், அந்த அணி ஒரு இடத்துக்கு வீரரை வாங்கவே தவறியிருக்கிறது. மிடில் ஆர்டரில் ஆடக்கூடிய ஒரு இந்திய பேட்ஸ்மேன். மற்ற இடங்களுக்கு அதிகம் டார்கெட் செய்ததால், அந்த அணியால் இந்த இடத்தை நிரப்ப முடியவில்லை. ஷாரூக் போன்ற ஒரு வீரரை வாங்கியிருந்தால் அவர்களுக்கு நல்ல பேலன்ஸ் கிடைத்திருக்கும். ஆனால் இப்போது அவர்களின் மிடில் ஆர்டர் இன்னும் சற்று பலவீனமாகவே காட்சிதருகிறது. ஒருவேளை மயாங்க் - அபிஷேக் ஓப்பனிங் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து, ஹெட்டுக்குப் பதில் ஷாரூக் போன்றதொரு வீரரை தேர்வு செய்திருந்தால், அவர்களின் காம்பினேஷன் சரியாக அமைந்திருக்கும்.
1. மயாங்க் அகர்வால்
2. டிராவிஸ் ஹெட்
3. அபிஷேக் ஷர்மா
4. எய்டன் மார்க்ரம்
5. ஹெய்ன்ரிச் கிளாசன்
6. ராகுல் திரிபாதி
7. வாஷிங்டன் சுந்தர்
8. பேட் கம்மின்ஸ்
9. ஷபாஸ் அஹமது
10. புவனேஷ்வர் குமார்
11. டி நடராஜன்
12. உம்ரன் மாலிக் / மயாங்க் மார்கண்டே