MS Dhoni PTI
T20

வீடியோ: ‘தலைவா.. லெஜண்ட்.. கடவுள்..’ - தோனி பற்றி டெல்லி அணி வீரர்கள் சொல்லியுள்ளது என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறித்து டெல்லி அணி வீரர்கள் ஒரு வார்த்தையில் தெரிவித்துள்ள வீடியோவை அந்த அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சங்கீதா

உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

மற்ற சீசன்களை காட்டிலும் நடப்பு ஐபிஎல் தொடர் பல அதிரடி திருப்பங்களுடன் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. ஏனெனில், லீக் போட்டியின் ஆரம்பக் கட்டத்தில் வெற்றிபெற்ற அணிகள் எல்லாம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்று எண்ணிய வேளையில், அதனையெல்லாம் தவிடு பொடியாக்கி தற்போது லீக் சுற்றுகள் முடிவடையும் தருவாயில் அப்படியே தலைக்கீழாக தோல்வியடைந்த அணிகள் எல்லாம் வீறுகொண்டு எழுந்து புள்ளிப்பட்டியலில் கடும் போட்டி அளித்து வருகின்றன.

இதனால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் 4 அணிகள் எவையெவை என்று நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறி கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு குறித்த ஆர்வம் அதிகரித்தே காணப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இதுவென்று கூறப்பட்டு வருவதும் இத்தகைய பரபரப்பு நிலவ முக்கிய காரணம். தோனி ஓய்வு குறித்து வர்ணனையாளர்கள் ஒவ்வொரு போட்டியின்போதும் அவரிடம் கேள்வி எழுப்பினாலும், உறுதியான தகவலை இதுவரை கேப்டன் தோனி வெளியிடவில்லை. புன்னகை ஒன்றையே பதிலாக அளித்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் 55-வது லீக் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை அணியும், வார்னர் தலைமையிலான டெல்லி அணியும் மோதவுள்ளன. இதையடுத்து தோனி குறித்து ஒரு வார்த்தையில் வர்ணிக்குமாறு டெல்லி வீரர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அந்த அணி வீரர்கள் அளித்துள்ள பதில்தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘மூத்த சகோதரர், மிஸ்டர் கூல், லெஜண்ட், ஃபினிஷர், தலைவா, கடவுள், வார்த்தையில்லை (மரியாதையாக தலைவணங்குதல்)’ என்று சீனியர் வீரர்கள் முதல் இளம் வீரர்கள் வரை பலவாறு கூறி நெகிழ்ந்துள்ளனர். இந்த வீடியோவை டெல்லி அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இன்று நடக்கும் போட்டியில் சென்னை அணி வெற்றிபெறும் பட்சத்தில், 15 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தை தக்க வைத்துக்கொள்ளும். இதனால் பிளே ஆஃப் வாய்ப்பு எளிதானதாக இருக்கும். அதேவேளையில் புள்ளிப்பட்டியலில் கடைசியில் உள்ள டெல்லி அணி, கடைசி சில போட்டிகளில் வெற்றிபெற்று வருவதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.