விளையாட்டு

தோனிக்கு 'சென்ஸ் ஆஃப் ஹியூமர்' அதிகம் - நடுவர் சைமன் டஃபல்

தோனிக்கு 'சென்ஸ் ஆஃப் ஹியூமர்' அதிகம் - நடுவர் சைமன் டஃபல்

webteam

தான் கண்ட சிறந்த கிரிக்கெட் வீரர்கள் 3 பேரில் தோனியும் ஒருவர் என கிரிக்கெட் நடுவர் சைமன் டஃபல் தெரிவித்துள்ளார்

கிரிக்கெட் நடுவர்களில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் சைமன் டஃபல். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், தலைசிறந்த நடுவர்களில் முக்கியமானவர். இவர் பல முக்கியப் போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார்.

தற்போது ஓய்வுபெற்றுவிட்ட சைமன் டஃபல், மொத்தமாக 74 டெஸ்ட் போட்டிகள், 174 ஒருநாள் போட்டிகள், 34 டி20 போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியுள்ளார். ஐசிசி  அளிக்கும் ஆண்டின் சிறந்த நடுவர் விருதை 5 முறை பெற்றுள்ளார். பலதரப்பட்ட வீரர்களை தன்னுடைய நடுவர் வாழ்க்கையில் சந்தித்துள்ள சைமன் டஃபல் கிரிக்கெட் வீரர் தோனி குறித்து பேசியுள்ளார்.

நேர்காணல் ஒன்றில் நீங்கள் சந்தித்த சிறந்த கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் யார் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சைமன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேரன் லீமன், மற்றும் ஷேன் வார்ன் ஆகியோரின் பெயரை தெரிவித்தார். மூன்றாவது பெயராக தோனியைக் குறிப்பிட்ட சைமன், தோனி மிகச்சிறந்த வீரர். நான் கிரிக்கெட்டை சரியாக கையாளக்கூடிய அறிவாளி. அவர் எப்போதும் அமைதியாகவே இருப்பார். நிதானமாக சூழலை கையாள்வார். ஆனால் பலருக்கும் தெரியாது. அவர் நகைச்சுவை உணர்வு கொண்டவர் எனத் தெரிவித்துள்ளார்.