விளையாட்டு

சாய் ஹோப் அபார சதம்: ஆப்கானை ’ஒயிட்வாஷ்’ செய்தது வெஸ்ட் இண்டீஸ்!

சாய் ஹோப் அபார சதம்: ஆப்கானை ’ஒயிட்வாஷ்’ செய்தது வெஸ்ட் இண்டீஸ்!

webteam

சாய் ஹோப்-பின் அபார சதத்தால், ஆப்கானிஸ்தனை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.

வெஸ்ட் இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வந்தது. இந்த தொடரின் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. 

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அஸ்கர் ஆப்கன் 86 ரன்னும், ஹஸ்ரத்துல்லா ஜஜாய் 50 ரன்னும் எடுத்தனர். முகமது நபி 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர், பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 48.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் ஹோப் அபாரமாக ஆடி, சதம் அடித்தார். அவர் 109 ரன்களுடனும் சேஸ் 42 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஏற்கனவே நடந்த 2 ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணியை, ஒயிட்வாஷ் செய்துள்ளது.