விளையாட்டு

முதல் டீன்-ஏஜ் வீரராக 4 விக்கெட் வீழ்த்தி ஷஹீன் ஷா அசத்தல்

முதல் டீன்-ஏஜ் வீரராக 4 விக்கெட் வீழ்த்தி ஷஹீன் ஷா அசத்தல்

rajakannan

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 228 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி லீட்ஸில் உள்ள ஹெட்லிங்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கான் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரஹ்மத் ஷா, குல்பதின் நெய்ப் களமிறங்கினர்.

நெய்ப் 15 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹஷ்மத்துல்லா ஷஹிடி முதல் பந்திலே டக் அவுட் ஆனார். இந்த இரண்டு விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்ரிடி சாய்த்தார். 27 ரன்னிற்குள் ஆப்கான் இரண்டு விக்கெட்டை இழந்தது. நபியும் 16 ரன்னில் ஏமாற்றினார்.

பின்னர் வந்தவர்களில், நஜிபுல்லா ஜத்ரன் மட்டும் 42 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆப்கான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் ஷா அப்ரிதி 4 விக்கெட் சாய்த்தார். இமாத் வாசிம், வாஹப் ரியாஸ் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர். 

சிறப்பாக விளையாடி வந்த ஷா 35 ரன்னிலும், விக்கெட் கீப்பர் இக்ரம் அலிகில் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய அஸ்கார் ஆப்கன் 35 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அவர் இரண்டு சிக்ஸர், மூன்று பவுண்டரிகள் விளாசினார். இதனையடுத்து, 228 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. 

ஆண்கள் உலகக் கோப்பை தொடரில் முதல் டீன்-ஏஜ் வீரராக ஷஹீன் 4 விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார். கடந்தப் போட்டியில் இவர் 3 விக்கெட் வீழ்த்தியிருந்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் முதன் முறையாக அமீர் விக்கெட் எடுக்கவில்லை.