விளையாட்டு

நிர்வாகிகள் பெயரை பரிந்துரைக்க பிசிசிஐ, மத்திய அரசுக்கு அனுமதி

நிர்வாகிகள் பெயரை பரிந்துரைக்க பிசிசிஐ, மத்திய அரசுக்கு அனுமதி

webteam

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினை நிர்வகிக்கும் பொறுப்புக்கானவர்களின் பெயர்களை பரிந்துரை செய்ய பிசிசிஐ மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிசிசிஐ நிர்வாகத்தில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தத் தவறியதாக அந்த அமைப்பின் தலைவர் அனுராக் தாக்குர் மற்றும் செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை பதவிநீக்கம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிசிசிஐ அமைப்பினை நிர்வகிக்கும் பொறுப்புக்கான நிர்வாகிகள் பெயரை பிசிசிஐ மற்றும் மத்திய அரசு பரிந்துரை செய்ய அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதாடினார். மத்திய அரசின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இந்த பொறுப்புக்காக பரிந்துரைக்கப்படும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெயர் பரிசீலிக்கப்படாது என்று தெரிவித்தது. மேலும், அவர்களது பெயரை சீலிட்ட உறையில் வரும் 27ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தது.